

திருப்பதியில் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவின் தேசிய ஜூனியர் தடகள போட்டிகள் நேற்று தாரகராமா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. 3 நாட்கள் வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட 28 மாநிலங்களைச் சேர்ந்த 4,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டிகளை ஆந்திர மாநில தொழில் துறை அமைச்சர் அமர்நாத் ரெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 31 மாவட்டங்களைச் சேர்ந்த 355 பேரும், புதுச்சேரியில் உள்ள 4 மாவட்டங்களிலிருந்து 52 பேரும் பங்கேற்றுள்ளனர். 100, 400, 600, 1000 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன.