பெர்த்தில் தன் டெஸ்ட் வாழ்வைத் தக்க வைக்க வேண்டிய நிலையில் மிட்செல் ஸ்டார்க்

பெர்த்தில் தன் டெஸ்ட் வாழ்வைத் தக்க வைக்க வேண்டிய நிலையில் மிட்செல் ஸ்டார்க்
Updated on
1 min read

டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வைத் தக்க வைக்க ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அணித் தேர்வாளரும் முன்னாள் வீரருமான மார்க் வாஹ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பெர்த் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சு எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை என்று கேப்டன் டிம் பெய்ன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார், ‘எனக்குத் தெரிந்து மிட்செல் ஸ்டார்க் ஃபார்மில் இருப்பது போல் தெரியவில்லை’ என்று சாடியிருந்தார்.

இத்தனைக்கும் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார், ஆனால் அவரிடம் தீவிரம் இல்லை, விட்டேற்றியாக வீசுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

மார்க் டெய்லர், மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கை ‘சாதாரணம்’ என்றார், ஆலன் பார்டர், டேமியன் பிளெமிங் அவர் ஆக்‌ஷனை விமர்சித்தனர், மிட்செல் ஜான்சன் அவரது உடல் மொழி மீது விமர்சனம் வைத்த்தார்.

இந்நிலையில் மார்க் வாஹ், “கடந்த 12 மாதங்களாக அவர் சிறப்பான பந்து வீச்சை வீசவில்லை.  சீராக வீசவில்லை, லைன் அண்ட் லெந்த் சரியில்லை, ஏனோதானோவென்று வீசுகிறார், ஆனால் அவர் புதிரான ஒரு வீச்சாளர் நிறைய மோசமான பந்துகளை வீசுவார் திடீரென ஒன்றுமே செய்ய முடியாத அதிரடிப் பந்துகளை வீசுவார். புதிய பந்தில் அவர் சீரான முறையில் வீச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

பெர்த் பிட்ச் அவருக்கு பொருத்தமாக இருக்கும் ஆனால் இங்கும் அவர் சரியாக வீசவில்லை எனில் அணியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார் மார்க் வாஹ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in