

அடிலெய்டில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே நடந்த சம்பவம் வேடிக்கையாக அமைந்துள்ளது.
அடிலெய்டின் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்ற ரீதியில் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணி 2-வது இன்னிங்ஸை முடித்துப் பந்துவீச வந்தது. ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றியவுடன் தேநீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது, அனைவரும் அஸ்வினுக்கு கைகொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.
ரோஹித் சர்மாவும் அஸ்வினுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தப் பின்னால் ஓடிச் சென்றார். ஆனால், ரோஹித் சர்மாவைக் கவனிக்காமல் அஸ்வின் சென்றதால், ரோஹித் சர்மா கை கொடுக்காமல் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார்.
இந்தக் காட்சி வீடியோவில் ஒளிபரப்பானது. ஆனால், ரோஹித் சர்மாவைக் கண்டுகொள்ளாமல் சென்றதற்கு முக்கியக் காரணம் அஸ்வின் யாருடனோ பேசிக்கொண்டே வந்ததால், ரோஹித் சர்மாவைப் பார்க்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தால் அஸ்வினுக்கு கை கொடுக்காமல் ரோஹித் சர்மா திரும்பினார்.