தற்காலிக கேப்டன்..அவருக்கு பேச மட்டும்தான் தெரியும்: பெய்னுக்கு பதிலடி அளித்த ரிஷப் பந்த்

தற்காலிக கேப்டன்..அவருக்கு பேச மட்டும்தான் தெரியும்: பெய்னுக்கு பதிலடி அளித்த ரிஷப் பந்த்
Updated on
1 min read

ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னை தற்காலிக கேப்டன் என்றும், அவருக்கு பேச மட்டும்தான் தெரியும் என்று இந்திய வீரர் ரிஷப் பந்த் கிண்டல் செய்திருக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே   மெல்போர்னில் 3-வது  டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில்  இரண்டாவது இன்னிங்ஸில் இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில்,  விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்த நிலையில் பேட்டிங் செய்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன், பெய்னை இந்திய வீரர் ரிஷப் பந்த், அவரை வெறுப்பேற்று வகையில் பேச்சுக் கொடுத்தார்.

இதுகுறித்த வீடியோவை  ஆஸ்திரேய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் பெயன் களத்தில் பேட் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் நின்று கீப்பிங் செய்துக் கொண்டிருந்த ரிஷப் பந்த் அவருக்கு  நேர் எதிரே பில்டிங்கிற்காக நின்றுக் கொண்டிருந்த ஜடேஜாவிடம்,   ”நமக்கு இங்கு தற்போது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். நீங்கள் எப்போதாவது தற்காலிக கேப்டனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா...? அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும் ..அதுமட்டுத்தான் அவருக்கு தெரியும். பேசுவது மட்டுமே ” என்றார்.

முன்னதாக ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய வீரர்களை பின்னால் நின்று கொண்டு கீப்பிங் வேலையுடன் கிண்டல் வேலையையும் செய்தார்.

இதனால் ரிஷப் பந்த் களமிறங்கியபோது பெயன் அவருக்கு பின்னால் நின்றுக் கொண்டு, ”ஒரு நாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்தை) ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை.  ஆஸ்திரேலிய விடுமுறையை கொஞ்சம் நீட்டித்துக் கொள்...ஹோபார்ட் மிக அழகான நகரம்.. அங்கு இவருக்கு நல்ல வாட்டர்ஃபிரண்ட் அபார்ட்மெண்ட்டை அளிக்கலாம்...நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் போது  என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார் .

இதற்கு தற்போது ரிஷப் பந்த் பதிலடி அளித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in