Published : 29 Sep 2014 07:34 PM
Last Updated : 29 Sep 2014 07:34 PM

கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் சானியா-சாகேத் ஜோடி தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-சாகேத் ஜோடி தங்கம் வென்றனர்.

இது இந்தியாவுக்கு நடப்பு ஆசியப் போட்டிகளில் 6-வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன் முடிந்த கலப்பு இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சைனீஸ் தைபே ஜோடியான சியென் யின் பெங்- ஹோ சிங் சான் ஜோடியை சானியா-சாகேத் ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

முதல் செட்டில் 4-3 என்று முன்னிலை பெற்ற சானியா-சாகேத் ஜோடி பிறகு 6-4 என்று அந்த செட்டைக் கைப்பற்றினர்.

2வது செட்டில் ஒரு பிரேக் கொடுத்து 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தது சானியா-சாகேத் ஜோடி ஆனால் அடுத்த சர்வை சைனீஸ் தைபே ஜோடி முறியடித்து 2-2 என்று சமன் செய்தது.

3-3 என்ற நிலையில் மீண்டும் சானியா சாகேத் ஜோடி சைனீஸ் தைபே ஜோடியின் சர்வை முறியடித்து 4-3 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு தங்கள் சர்வை சைனீஸ் தைபே ஜோடி வெல்ல முடியாமல் போனது. சானியா-சாகேத் 2வது செட்டையும் 6-3 என்று கைப்பற்றினர்.

2006ஆம் ஆண்டு லியாண்டர் பயஸுடன் ஜோடி சேர்ந்து தங்கம் வென்றார் சானியா, பிறகு 2010 விளையாட்டுப் போட்டிகளில் விஷ்ணு வர்தனுடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 29 வெண்கலம் வென்று மொத்தம் 42 பதக்கங்கள் வென்று 9வது இடத்தில் உள்ளது. சீனா, கொரியா, ஜப்பான், கஜகஸ்தான், ஈரான் முதல் 5 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x