பெர்த் ஆடுகளம் குறித்து ஐசிசி கருத்து: ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிருப்தி

பெர்த் ஆடுகளம் குறித்து ஐசிசி கருத்து: ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிருப்தி
Updated on
1 min read

பெர்த் கிரிக்கெட் ஆடுகளம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கருத்து தெரிவித்திருப் பதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிருப்தி அடைந்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணி களுக்கு இடையிலான 2-வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டி பெர்த் மைதா னத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த ஆடுகளம் சராசரியானது என்று ஐசிசி கருத்து தெரிவித்துள்ளது.

இதற்கு மிட்செல் ஸ்டார்க் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறும்போது, “பெர்த் ஆடுகளம் சராசரியானது என்று ஐசிசி தெரிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தியா வுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான சிறந்த போட்டியாக அது இருந்தது. பந்துக்கும், பேட்டுக்கும் இடையே நடந்த மிகப்பெரிய போராட்டமாக பெர்த் போட்டி அமைந்தது.

இதைத்தான் டெஸ்ட் போட்டி யில் நாங்கள் விரும்புகிறோம்.

பெர்த் ஆடுகளம் மிகவும் அருமையாக இருந்தது. அது போன்ற ஆடுகளத்தை ஒவ்வொரு பந்துவீச்சாளரும், பேட்ஸ்மேனும் விரும்புவார்கள். அந்த ஆடு களத்தை மிகச் சிறந்தது என்று நான் சொல்வேன்.

ஆடுகளத்தில் இருந்த விரிசல் கள் மிகப்பெரிய பங்காற்றின. பெர்த், அடிலெய்ட் மைதானத்தில் நான் பந்துகளை ஸ்விங் செய் தேன்.

இதைப் போலவே மெல்பர்னில் நடைபெறும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியிலும் ஸ்விங் செய்வேன்” என்றார். பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in