கொல்கத்தா-ஸ்கார்ச்சர்ஸ் இன்று மோதல்

கொல்கத்தா-ஸ்கார்ச்சர்ஸ் இன்று மோதல்
Updated on
1 min read

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், பெர்த் ஸ்கார்ச்சர்ஸும் மோதுகின்றன.

இந்தத் தொடரில் இதுவரை மோதியுள்ள இரு ஆட்டங்களிலும் வென்றதோடு, தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வாகை சூடியிருக்கும் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி, இந்தப் போட்டியிலும் வெற்றியைத் தொடர முயற்சிக் கும். கொல்கத்தா அணி ராபின் உத்தப்பா, கம்பீர், டென் தஸ்சாத்தே, ரஸல் போன்ற வலுவான பேட்ஸ்மேன்களை யும், சுநீல் நரேன், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட வலுவான சுழற்பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளது. பெர்த் ஸ்கார்ச் சர்ஸ் அணியில் சிம்மன்ஸ், ஒயிட் மேன், மிட்செல் மார்ஷ் உள்ளிட் டோர் பலம் சேர்க்கின்றனர்.

போட்டி நேரம்: இரவு 8 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in