

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் ஆடிவருகிறது, மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடர் ஜனவரி 18ம் தேதி 3வது ஒருநாள் போட்டியுடன் நிறைவடைகிறது.
இந்திய ஒருநாள், டி20 அணி இந்தியா திரும்பவில்லை, மாறாக நியூஸிலாந்துக்கு அப்படியே பயணம் மேற்கொண்டு முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
அதன் விவரம் வருமாறு:
1வது ஒருநாள் போட்டி ஜனவரி 23: நேப்பியர் (இந்திய நேரம் காலை 7.30)
2வது ஒரு ஒருநாள் போட்டி ஜனவரி 26: மவுண்ட் மவுங்கனி (காலை 7.30)
3வது ஒருநாள் போட்டி ஜனவரி 28: மவுண்ட் மவுங்கனி (காலை 7.30)
4வது ஒருநாள் போட்டி ஜனவரி 31: ஹேமில்டன் (காலை 7.30)
5வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 3 : வெலிங்டன் (காலை 7.30)
டி20 போட்டிகள்:
பிப்.6 - முதல் டி20 - வெலிங்டன் (இந்திய நேரம் நண்பகல் 12.30)
பிப்.8 - 2வது டி20 - ஆக்லாந்து (இந்திய நேரம் நண்பகல் 11.30)
பிப்.10 - 3வது ஒருநாள் - ஹேமில்டன் (காலை 12.30)
ஒளிபரப்பு நேரலை: ஆன்லைனில் ஹாட்ஸ்டார்
தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்