

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஜீது ராய். இந்த ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் ஜீது ராய் பெற்றுள்ளார். ஸ்பெயினில் 51-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஜீது ராய் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் விளையாடுவதையும் உறுதி செய்துள்ளார். 25 வயதாகும் ஜீது ராய் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர். உலக துப்பாக்கி சுடுதல் தரவரிசையில் அவர் 5-வது இடத்தில் உள்ளார்.