

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் மீண்டும் ரூ. 8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரது முன்னாள் உரிமையாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ.8.4 கோடிக்கு இன்று ஏலம் எடுத்தது.
முன்னதாக இவரை விடுவித்து பிறகு தற்போது இவ்வளவு விலை கொடுத்து எடுக்க வேண்டிய காரணம் என்னவென்பதும் புரியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் இவரை ஏலம் எடுக்க போட்டியில் இறங்கியது.
முந்தைய ஏலத்தில் இவரை ரூ.11.5 கோடிக்கு எடுத்துப் பிறகு இவரை விடுவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது மீண்டும் ரூ.8.4 கோடிக்கு அவரை ஏலம் எடுத்துள்ளது.
இவர் இந்திய அணியிலும் இல்லை, உலகக்கோப்பை அணியிலும் இவர் இடம்பெறும் வாய்ப்பில்லை எனும்போது இவ்வளவு தொகையை இருமுறை கொடுத்து இவரை ஏன் ஏலம் எடுக்க வேண்டும் என்பதும் புரியவில்லை.
மேலும் கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் சரியாக பந்து வீசவும் இல்லை.
மொகமது ஷமியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.4.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியினால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இஷாந்த் சர்மாவை டெல்லி அணி ரூ.1.1 கோடிக்கு எடுத்துள்ளது