

பில்பாவ் பைனல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளார் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். இந்த வெற்றியின் மூலம் அவர் தனிமுன்னிலையும் பெற்றுள்ளார்.
ஸ்பெயினின் பில்பாவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆனந்த் தனது முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான உக்ரைனின் ருஸ்லான் போனோமரியோவை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஆனந்த், ருஸ்லானை எளிதாக வீழ்த்தினார்.
ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன்-ஸ்பெயினின் பிரான்சிஸ்கோ வெலஜோ பொன்ஸ் இடையிலான மற்றொரு முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது.