

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம், பாட் மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார்.
அண்மையில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில் ஹைத ராபாத்துக்கு வந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை, சிந்து சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது போட்டியில் தான் வென்ற பதக்கத்தையும் வெங் கய்ய நாயுடுவிடம் காண்பித்தார். பெரும் மகிழ்ச்சி அடைந்த வெங் கய்ய நாயுடு, பி.வி. சிந்துவை வெகுவாக பாராட்டினார்.
அப்போது வெங்கய்ய நாயுடு கூறும்போது, “நாட்டின் அனைத்து கல்வி திட்டத்திலும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகை யில் விளையாட்டை ஒரு பாடத் திட்டமாக வைக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறை யினருக்கு பி.வி.சிந்து போன்றவர் கள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக வும், வழிகாட்டியாகவும் உள்ளனர். இதற்காக எனது மனமார்ந்த வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.