இந்திய அணிக்குத் தேர்வாக வேண்டுமென்றால் தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியாக வேண்டும்: மொஹீந்தர் அமர்நாத் திட்டவட்டம்

இந்திய அணிக்குத் தேர்வாக வேண்டுமென்றால் தோனி உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியாக வேண்டும்: மொஹீந்தர் அமர்நாத் திட்டவட்டம்
Updated on
1 min read

முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர், 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆட்ட நாயகன் மொஹீந்தர் அமர்நாத், எந்த ஒரு வீரர் இந்தியாவுக்காகத் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில் உள்நாட்டுப் போட்டிகளில் ஆடி தன் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தோனி பற்றி அவரிடம் பிடிஐ கேட்ட போது, “ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமானவரே, ஆனால் நான் கூறுவது என்னவெனில் இந்தியாவுக்காக ஆட வேண்டுமா மாநிலத்துக்காக ஆட வேண்டும் என்பது முக்கியம். பிசிசிஐ தன் கொள்கையை இது குறித்து மாற்றிக் கொள்ள வேண்டும். மூத்த வீரர்கள் பலர் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடுவதேயில்லை.

பிசிசிஐ இந்த நிபந்தனையை தகுதி பெறுவதற்கான அளவு கோலாக வைக்க வேண்டும். அவரவர்கள் தங்கள் மாநிலத்துக்கு ரெகுலராக ஆட வேண்டும். அப்போதுதான் அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று கணிக்க முடியும். கடந்த காலத்தில் பெரிய சாதனைகள் புரிந்திருக்கலாம், அதை வைத்துக்கொண்டு காலம்பூராவும் ஓட்ட முடியாது.  தற்போது என்ன பார்மில் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஏதாவது ஒரு வடிவத்தில்தான் ஆடுகிறார்கள் என்றாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் ஆடுவது அவசியம். அப்போதுதான் அணியில் தேர்வு செய்ய தகுதி பெறுவார்கள் என்பதைக் கொண்டு வர வேண்டும்” என்று மொஹீந்தர் அமர்நாத், தோனி பற்றிய கேள்விக்குப் பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in