

ஷான் போலக்கின் 421 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையை டேல் ஸ்டெய்ன் நிகழ்த்தியதையடுத்து முன்னாள், இந்நாள் வீரர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்தச் சாதனையை டேல் ஸ்டெய்ன் முறியடித்த போது ஷான் போலக் வர்ணனை அறையில் வர்ணனை கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் தன் ட்விட்டரில் ‘வெல்டன் டேல் ஸ்டெய்ன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜாக் காலிஸ்: ‘இந்தச் சாதனைக்குத் தகுதியான டேல் ஸ்டெய்ன், வெல் டன். வெளியில் தெரியாமல் நீங்கள் செய்த கடின உழைப்புக்குக் கிடைத்த பலனாகும் இது. இதுதான் துல்லிய உதாரணம். இன்னும் சிலபல விக்கெட்டுகள் உங்கள் முன்னால் உள்ளன.
கிரேம் ஸ்மித்: கங்ராட்ஸ் ஹூலி
மைக்கேல் வான்: தன் முதல் டெஸ்ட் விக்கெட்டாக என் ஆஃப் ஸ்டம்பைப் பெயர்த்தவர் இன்று தென் ஆப்பிரிக்க டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர்! கிரேட் பவுலர், டாப் மேன். (ஆனால் மைக்கேல் வான் டேல் ஸ்டெய்னின் 3வது விக்கெட், ஸ்டெய்னின் முதல் விக்கெட் மார்கஸ் ட்ரஸ்கோதிக்)
ஏ.பி.டிவில்லியர்ஸ்: டேல் ஸ்டெய்ன் உங்களுக்கு சல்யூட்! என்ன மாதிரியான மனிதர், என்ன மாதிரியான வீரர்! கங்க்ராட்ஸ் லெஜண்ட்
சங்கக்காரா: உண்மையான சாம்பியன்... சாதனைக்கு உண்மையில் தகுதிபெற்றவர்.
மார்க் பவுச்சர், ராபின் பீட்டர்சன் உள்ளிட்ட வீரர்களும் ஸ்டெய்னுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.