Published : 29 Dec 2018 04:11 PM
Last Updated : 29 Dec 2018 04:11 PM

2018-ல் 247 விக்கெட்டுகள்: இந்திய பவுலர்கள் சாதனையும் சில சுவாரஸ்யத் தகவல்களும்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பும்ராவுக்கு 2018-ம் ஆண்டு அதிக அறுவடை செய்த ஆண்டாகும். அயல்நாட்டில் ஜஸ்பிரித் பும்ரா ஓர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ஆனார். இவர் 47 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷமி இவருக்கு வெகு அருகில் 45 விக்கெட்டுகளில் உள்ளார், நாளை மெல்போர்னில் 2 விக்கெட்டுகளையும் ஷமி வீழ்த்தி விட்டால் அவரும் பும்ராவும் இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் என்ற இடத்தைப் பிடிப்பார்கள்.

 

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்த்து பும்ரா 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 47 விக்கெட்டுகள் என்பது அபாரமான பவுலிங் ஆகும். இவர் எடுத்த மூன்று 5 விக்கெட்டுகளில் 2 முறை இந்தியா வென்றுள்ளது. மெல்போர்ன் வெற்றி கிட்டினால் அது 3வது வெற்றியாகும்.1985ம் ஆண்டு கபில்தேவ்

 

1985 தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கபில்தேவ் 106 ரன்கள் கொடுத்து ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதற்கு அடுத்த இடத்தில் பும்ராவின் மெல்போர்ன் 6/33 உள்ளது. இதே மெல்போர்னில் கபில்தேவ் 1981-ல் 5/28 என்று அசத்தியடில் கிரெக் சாப்பலின் ஆஸி. அணி உதைவாங்கியதும் நினைவு கூரத்தக்கது.

 

இந்த போட்டியில் பும்ரா ஃபுல் லெந்த், ஷார்ட் பிட்ச், யார்க்கர் என்று அனைத்து விதமான பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தியுள்ளார், இது மிகவும் அரிதான ஒன்று.

 

2018-ல் இந்திய பவுலர்கள் 247 விக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றியுள்ளனர். ஓர் ஆண்டில் இந்திய பவுலர்கள் எடுக்கும் அதிக விக்கெட்டுகளாகும் இது.  இதற்கு முன்னர் 1979-ம் ஆண்டு 237 விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

 

292 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாட முன்னிலையாகும்.

 

புஜாராவும், கோலியும் 2வது இன்னிங்சில் டக் அவுட் ஆகினர், இதே ஆண்டில் இருவரும் இப்படி டக் அவுட் ஆவது 2வது முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x