Last Updated : 20 Dec, 2018 09:04 AM

 

Published : 20 Dec 2018 09:04 AM
Last Updated : 20 Dec 2018 09:04 AM

மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் இன்று தேர்வு 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளரை தேர்வு செய்வ தற்கான நேர்முகத் தேர்வு மும்பை யில் இன்று நடைபெறுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சி யாளராக செயல்பட்டு வந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம் பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாக மேற்கிந்தியத் தீவு களில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜ் நீக்கப்பட்டது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்து வெளி யேறியதும் பயிற்சியாளர் மற்றும் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி ஆகியோர் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத் தார் மிதாலி ராஜ். மேலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அவர்கள் அழிக்க நினைப்பதாகவும் கூறி னார். இதற்கு ரமேஷ் பவாரும் பதிலடி கொடுத்தார். மிதாலி ராஜ் அணியின் நலனுக்காக விளை யாடாமல் தனது சுயநலனுக்காக விளையாடுகிறார். அணியில் குழப் பத்தை விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே ரமேஷ் பவாரே பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என டி 20 அணியின் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர், துணை கேப் டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத் தனர். மேலும் பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினரான டயானா எடுல்ஜி, அடுத்த மாதம் நடைபெறும் நியூஸிலாந்து தொடர் வரை ரமேஷ் பவாரை பயிற்சியாளராக தொடரச் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால் பிசிசிஐ நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராய், இவை எதற்கும் செவி சாய்க்காமல் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான பணிகளை தொடங்கினார். புதிய பயிற்சி யாளரை தேர்ந்தெடுப்பதற்காக கபில் தேவ், அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வை மும்பையில் இன்று நடத்துகிறது.

புதிய பயிற்சியாளருக்கு விண்ணப்பித்தவர்களில் 28 பேரின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ தயார் செய்துள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன், கிப்பஸ், டபிள்யூ.வி.ராமன், வெங் கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர், டிரென்ட் ஜான்ஸ்டன், மார்க் கோல்ஸ், டிமிட்ரி மஸ்கரன்ஹஸ், பிராட் ஹாக் ஆகியோர் முக்கிய நபர்களாக உள்ளனர். இவர்களு டன் ரமேஷ் பவாரும் நேர்முகத் தேர் வில் கலந்து கொள்ள உள்ளார்.

பயிற்சியாளருக்கு விண்ணப் பித்தவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இன்றைய நேர்முகத் தேர்வில் ‘ஸ்கைப்’ வழியாக கலந்துகொள்ளக்கூடும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x