

பெர்த் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் நடத்தை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. டிம் பெய்னும் இவரும் நெஞ்சுக்கு நெஞ்சு மோதலி ஈடுபட்ட சிறுபிள்ளைத்தனமான நடத்தை, கோலி, டிம் பெய்னின் கேப்டன்சி பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் பண்டிதருமான இயன் சாப்பல் சில பார்வைகளை முன் வைத்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவரிடம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த போது:
கோலிக்கும் பெய்னுக்கும் இடையே நடந்த விவகாரம் நடுவர்கள் கையாள வேண்டிய விவகாரமாகும். இரு வீரர்களின் நடத்தை மீதும் புகார்கள் எழுப்பப்படவில்லை எனும்போது, தவறாக எதுவும் நடந்து விடவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நான் நினைக்கிறேன் கோலியின் எண்ணங்கள் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டதிலிருந்து சற்றே பாதை விலகியது என்றே கருதுகிறேன். அவருக்கு அவுட் கொடுத்தது அவரது மனச்சமநிலையை கொஞ்சம் குலைத்தது என்றே கருதுகிறேன். டிம் பெய்ன் இருவரையும் ஒப்பிடும் போது கேப்டன்சியில் அங்கு நின்று விடுகிறார்.
கோலியின் கேப்டன்சி கொஞ்சம் மரபானதாக இருந்து வருகிறது, பெர்த் போன்ற பிட்ச்களில் அவர் எதிரணியினரின் ஆட்டத்தை வெறும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டும் போதாது, அப்படி இருக்கக் கூடாது. ஓவ்வொரு கணத்திலும் விக்கெட் விக்கெட் என்றுதான் அவர் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். இதில் அவர் முன்னேற்றம் காண்பாரா என்றால், அவரால் இதில் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியாது என்றே கருதுகிறேன்.
ஜடேஜா இந்தப் பிட்சில் பெரிய அளவில் வீசியிருப்பார் என்று கருத இடமில்லை, அவர் பந்தைச் சறுக்கிச்செல்லுமாறு வீசுபவர், பெர்த்தில் இருந்த கூடுதல் பவுன்சினால் ஜடேஜாவுக்கு பெரிய பயன் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ரன்களை எடுத்திருக்கலாம் ஆனால் அணித்தேர்வு செய்பவர்கள் ஒரு பவுலரை அவர் சேர்க்கும் ரன்களுக்காக அணியில் சேர்க்க முடியாது.
டிம் பெய்ன் பெர்த்தில் நன்றாக கேப்டன்சி செய்தார், அவர் அமைதியான வலுவான நபராக இருக்க வேண்டும், அணிக்கு உதவினார் அவரது இந்த ஆளுமை ஆஸ்திரேலிய அணிக்கு நல்லது