

இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் தங்கள் கனவு திட்டமான கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளனர். பதான்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அகாடமி அவர்களது சொந்த ஊரான பரோடாவில் அடுத்த மாதம் முதல் செயல்படத் தொடங்கும்.
பள்ளி நிலையில் இருந்தே மாணவர்களுக்கு சிறப்பான கிரிக்கெட் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டில் மேலும் சில நகரங்களுக்கு அகாடமி விரிவுபடுத்தப்படும். ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 50 அகாடமிகள் தொடங்கப்படும். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கிரேக் சேப்பல், கேமரூன் டிரெடெல் ஆகியோர் அகாடமியின் ஆலோசகர்களாக இருப்பார்கள் என்று பதான் சகோதரர்கள் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதுதான் தனது அடுத்த இலக்கு என்று குறிப்பிட்ட யூசுப் பதான், இதற்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணி தேர்வாளர்களிடம் எனது திறமையை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.