ரஞ்சி கோப்பையில் தமிழகம் தோல்வி

ரஞ்சி கோப்பையில் தமிழகம் தோல்வி
Updated on
1 min read

ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் 216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பெங்கால் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு 129 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை பெங்கால் அணி விளையாடியது.

அந்த அணியின் கேப்டன் மனோஜ் திவாரி 18 ரன்களிலும் அவரை தொடர்ந்து அமிர் கானி 25 ரன்களிலும் நடராஜன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்கள். இதைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் ரகில் ஷா பந்து வீச்சில் மஜூம் தார் 7, ரிட்டிக் சட்டர்ஜி 0, கோஸ்வாமி 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 150 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் சுதிப் சட்டர்ஜியுடன் இணைந்து பிரமானிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெற்றிக்கு 9 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் சுதிப் சட்டர்ஜி (40), ரகில் ஷா பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அசோக் திண்டா 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். எனினும் பிரமானிக் நிலைத்து நின்று விளையாடி 97 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். முடிவில் பெங்கால் அணி 82.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in