என் அனுபவத்தில் ஆஸி. சொந்த மண்ணில் இப்படித் திணறிப் பார்த்ததில்லை: சச்சின் டெண்டுல்கர்

என் அனுபவத்தில் ஆஸி. சொந்த மண்ணில் இப்படித் திணறிப் பார்த்ததில்லை: சச்சின் டெண்டுல்கர்
Updated on
1 min read

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் ஆகியோர் இல்லாத ஆஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சிடம் திணறி வருகிறது, குறிப்பாக அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அச்சுறுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி பயம் இருப்பது போல் ஆடிவருகின்றனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பதிவில் இதே மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்:

டீம் இந்தியா இப்போது தன் பிடியை நழுவ விடக்கூடாது. இந்தச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.  ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தங்கள் சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு தற்காப்பு, தடுப்பு உத்தியுடன் ஆடி என் அனுபவத்தில் கண்டதில்லை.

அஸ்வின் திறமையாக வீசி வருகிறார். இப்போதைக்கு இந்திய அணியின் கை ஓங்கியிருக்க அஸ்வின் தான் காரணம். ஆட்டம் இப்போது மிகவும் ஓபனாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் 15-20 ஓவர்கள் புதிய பந்தில் எப்படி வீசுகிறோம் என்பது மிக முக்கியம். இதுதான் இந்த டெஸ்ட் எப்படிப் போகும் என்பதைத் தீர்மானிக்கும்.

இவ்வாறு 2 ட்வீட்டர் பதிவுகளில் சச்சின் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in