Published : 18 Dec 2018 04:32 PM
Last Updated : 18 Dec 2018 04:32 PM

ஹெட்மையரை ரூ.4.2 கோடிக்குத் தூக்கியது ஆர்சிபி: விஹாரிக்கு ரூ.2 கோடி: விலைபோகாத கறுப்பு குதிரைகள் யார்?

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஷிம்ரன் ஹெட்மையரை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

இந்திய டெஸ்ட் அணி வீரரான ஹனுமா விஹாரியை ரூ.2.கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி கேப்பிடள்ஸ் அணி.

2019-ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.. 8 ஐபிஎல் அணிகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கான இடங்கள் காலியாக இருக்கிறது. 350-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களும், 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் உள்ளனர்.

ஏலம் தொடங்கியவுடன் சட்டீஸ்வர் புஜாரா பெயர் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு முன்மொழியப்பட்டது. ஆனால், எந்த அணி நிர்வாகமும் புஜாராவை எடுக்க முன்வரவில்லை. அடுத்ததாக மேற்கு வங்க அணியின் மனோஜ் திவாரியின் பெயர் வாசிக்கப்பட்டபோதிலும் அவரையும் ஏலத்தில் எடுக்க ஆள் இல்லை.

ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடிவரும் இந்திய அணியில் உள்ள ஹனுமா விஹாரி பெயர் வாசிக்கப்பட்டதும் அவரை ஏலத்தி் எடுக்க போட்டி இருந்தது. 50 லட்சம் அடிப்படை விலையில் இருந்து உயர்ந்து, ரூ.2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி விஹாரியை விலைக்கு வாங்கியது.

அடுத்ததாக மேற்கிந்தியத்தீவுகள் அணியின் இடதுகை அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மையர் பெயர் வாசிக்கப்பட்டு அடிப்படை விலை ரூ.70 லட்சம் வைக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. முடிவில் ரூ.4.20 கோடிக்கு ஆர்சிபி அணி ஹெட்மேயரை ஏலத்தில் எடுத்தது.

மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் கடந்த ஆண்டு ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மோய்சஸ் ஹென்ட்ரிக்ஸ் ரூ. ஒரு கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

விலையில்லாத வீரர்கள்

ஆனால், மனோஜ் திவாரி, சட்டீஸ்வர் புஜாரா, நியூசிலாந்து வீரர் மெக்கலம், அலெக்ஸ் ஹேல்ஸ், குர்கீரத் சிங், ஜோர்டன், கிறிஸ் வோக்ஸ், மார்டின் கப்தில் ஆகியோர் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x