

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் சென்னையை சேர்ந்த வீரர் ஆதித்யா கிரி தங்கப் பதக்கம் வென்றார்.
62-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாரா துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டான்டிங் பிரிவில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதித்யா கிரி தங்கப் பதக்கமும், புரோன் பொஷிசன் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
பாரா பிரிவில் தமிழகத்தில் இருந்து ஆதித்யா கிரி மட்டுமே பங்கேற்ற நிலையில் இரு பதக்கங்கள் வென்று மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப் பதையே பிரதான இலக்காக கொண்டுள்ள ஆதித்யா கிரி, மேற்கொண்டு தனது பயிற்சிக்காகவும், பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு யாராவது நிதியுதவி அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.