Published : 24 Nov 2018 05:42 PM
Last Updated : 24 Nov 2018 05:42 PM

6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை

புதுடெல்லியில் நடைபெற்ற மகளிர் உலகக்குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஹனா ஒகோட்டாவை 5-0 என்று பிளாங்க் செய்த மேரி கோம் உலக மகளிர் குத்து ச் சண்டையில் 6வது முறையாக தங்கப்பதக்கம் வென்று தனித்துவமான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

புதுடெல்லி  கே.டி.ஜாதவ் உள்ளரங்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 6 முறை உலகக் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை நிகழ்த்தினார் மேர் கோம். அதாவது 2002, 2005, 2006, 2008 , 2010  உலகக்குத்துச் சண்டையில் தங்கம் வென்றிருந்தார் மேரி கோம். இது 6வது முறை.

அயர்லாந்தின் கேட்டி டெய்லர் 5 முறை தங்கம் வென்ற சாதனையை உடைத்தார் மேரி கோம். 2001-ல் வெள்ளி வென்றார் மேரி கோம், இதன் மூலம் 7 பதக்கங்களை வென்ற வீராங்கனையுமானார் மேரி கோம்.

ஆடவர் பிரிவில் கியூபாவின் பெலிக்ஸ் சேவன் 6 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளர், அவருடன் தற்போது மேரி கோம் இணைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று வடகொரியாவின் கிம் ஹியாங் மி என்பவரை இதேபோல் 5-0 என்று பிளாங்க் செய்தார்.

மேரி கோமை அடுத்து மற்றொரு இந்திய வீராங்கனை சோனியா 57 கிலோ எடைப்பிரிவில் இறுதி போட்டியில் முதல் முறையாக இறுதிக்கு நுழைந்த ஜெர்மன் வீராங்கனை ஆர்னெலா வாஹ்னரைச் சந்திக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x