Published : 26 Aug 2014 11:09 AM
Last Updated : 26 Aug 2014 11:09 AM

கபடியில் இந்தியா பாக். மோதல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத இருகின்றன.ஆசிய விளையாட்டுப் போட்டி தென்கொரியாவின் இன்செயோன் நகரில் செப்டம்பர் 19 முதல் ஆக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஈரான், ஜப்பான், மலேசியா, கொரியா அணிகள் உள்ளன. செப்டம்பர் 30-ம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக 28-ம் தேதி இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி அரையிறுதி அக்டோபர் 2-ம் தேதி நடக்கிறது. அக்டோபர் 3-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x