காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் தேவேந்திரோ, சரிதாவுக்கு வெள்ளி

காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் தேவேந்திரோ, சரிதாவுக்கு வெள்ளி
Updated on
1 min read

காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், சரிதா தேவி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் லைட் ஃபிளை (49 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் பேடி பர்ன்ஸ் 3-0 என்ற கணக்கில் இந்தியாவின் தேவேந்திரோ சிங்கை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதனால் தேவேந்திரோவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

மகளிர் லைட் வெயிட் (57-60 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஷெல்லி வாட்ஸ் 3-1 என்ற கணக்கில் இந்தியாவின் சரிதா தேவியைத் தோற்கடித்தார். இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சரிதா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in