Published : 10 Nov 2018 04:46 PM
Last Updated : 10 Nov 2018 04:46 PM

சென்னை பெண் அசத்தல்: டி20 உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் அபார பந்துவீச்சு

கயானாவில் நேற்று நடந்த டி20 மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சென்னை வீராங்கனை ஹேமலதா தயாளன் அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. கயானாவில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. 195 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

இந்த உலகக்கோப்பைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வரும், சென்னையில் பிறந்தவரான ஹேமலதா அறிமுகமானார். இவர் தனது முதல் போட்டியிலேயே அதிரடியாக பேட் செய்து 7 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆப்-ஸ்பின்னரான ஹேமலதா 4 ஓவர்கள் வீசிய 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் ஹேமலதா தயாளன். சென்னையில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலதுகை பேட்ஸ்மேனாகவும், வலதுகை ஆப்ஸ்பின்ராகவும் வலம் வந்த ஹேமலதா தயாளன், இந்திய ஏ அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பயணம் சென்றார். அங்கு 3 போட்டிகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார். இதையடுத்து இந்திய ஒரு அணியில் இடம் பெற்று கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை பயணம் மேற்கொண்டார். இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஹேமலதா 41 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தற்போது, டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான ஹேமலதா முதல் போட்டியில் 15ரன்கள் சேர்த்தார், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x