Published : 15 Nov 2018 08:57 AM
Last Updated : 15 Nov 2018 08:57 AM

2-வது சுற்றில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த்

ஹாங்காங் ஓபன் பாட்மிண் டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஹாங்காங்கின் கவுலூன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 14-ம் நிலை வீராங் கனையான தாய்லாந்தின் நிட்சோன் ஜின்டாபோலை எதிர்த்து விளையாடினார். சுமார் 61 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட் டத்தில் சிந்து 21-15, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஜின்டாபோலை சிந்து வீழ்த்துவது இது 4-வது முறையாகும்.

2-வது சுற்றில் சிந்து 10-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சுங் ஜி ஹைனை எதிர்கொள்கிறார். சுங் ஜி ஹைனுக்கு எதிராக இது வரை 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிந்து 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். அதேவேளையில் 9-ம் நிலை வீராங்கனையான இந்தி யாவின் சாய்னா நெவால், 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 4-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-11, 21-15 என்ற செட் கணக்கில் 34-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்டையும், 17-ம் நிலை வீரரான இந்தியாவின் சமீர் வர்மா 21-17, 21-14 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் சுப்பன்யு அவிஹிங்சனனையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் 24-ம் நிலை வீரரான இந்தியாவின் சாய் பிரணீத் 21-16, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் கோஷிட் ஹெட்பிரதாப்பிடம் தோல்வி யடைந்தார்.

இதேபோல் 52-ம் நிலை வீரரான இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப், 7-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் அந்தோனி சினிசுகாவிடம் 16-21, 13-21 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x