

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் இன்று கோலாகலமாகத் தொடங்கு கின்றன. 43 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் இந்திய அணி தங்கம் வென்று இழந்த பெருமையை மீட்குமா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.
புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்தப் போட்டிகள் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோத வுள்ளன. இந்தப் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, நியூஸி லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா, நெதர் லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 16 அணி களும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதும். இதைத் தொடர்ந்து 2-வது சுற்றும் லீக் ஆட்டங்களாக நடைபெறும். அதன்பின்னர் நாக்-அவுட் சுற்றுப் போட்டிகள் அரங்கேறும்.
இதுவரை 10 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடை பெற்றுள்ளன. 1975-ல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றிருந்தது. அஜித் பால் சிங் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்தியாவின் பெருமையை ஹாக்கியில் உலகறியச் செய்தது.
ஆனால் அதன் பிறகு இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. தற்போது 43 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை இந்திய அணி வெல்லவேண்டும் என்று இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். போட்டி இந்தியாவில் நடைபெறுவ தால் ரசிகர்களுக்கு ஆவலும் கூடியுள்ளது.
உலகக் கோப்பையை வென்ற பிறகு 1982-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 5-வது இடத்தைப் பிடித்தது. அதுவே உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் இந்திய அணி பெற்ற சிறந்த இடமாகும்.
தற்போது இந்திய அணி ஹாக்கி தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது
இந்தத் தொடரில் 2 முறை சாம்பி யன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, பலம் வாய்ந்த நெதர்லாந்து, அசுர பலம் படைத்த ஜெர்மனி, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா ஆகிய அணிகள் இந்திய அணிக்கு மிரட் டல் விடும் வகையில் உள்ளன. எனவே இந்தப் போட்டி இந்திய அணிக்கு நிச்சயம் சவால் மிகுந் ததாக இருக்கும்.
2010-ல் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கடைசி இடத்தை (8-வது இடம்) பிடித்திருந்தது ரசிகர் களை அதிருப்தியடைச் செய்தது. எனவே இந்த முறை சிறப்பாக விளையாடி 43 ஆண்டு கனவை நனவாக்க இந்திய வீரர்கள் தீவிர முயற்சி செய்வர் என எதிர்பார்க் கலாம்.
இதற்காக தலைமைப் பயிற்சி யாளர் ஹரேந்திர சிங் தலைமையில் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தயாராகியுள்ளது.
இந்திய அணி சி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளுடன் உள்ளது.
எனவே முதல் சுற்றுப் போட்டி கள் இந்திய அணிக்கு கடுமையா னதாக இருக்காது என்று கூறலாம்.
டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் போட்டியில் பெல்ஜியத்துடனும், டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் கனடாவுடனும் இந்தியா மோதவுள்ளது.
போட்டிக்கு முன்னதாக கோலாகலமான தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் அரங்கேறவுள்ளது. அதன் பின்னர் இந்தி நடிகர் ஷாருக் கான் பங்கேற்கும் நடன நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.