Published : 24 Nov 2018 03:31 PM
Last Updated : 24 Nov 2018 03:31 PM

ஷாகிப் அல் ஹசனின் ‘டபுள்’ : போத்தம், கபில், பிளிண்டாப்பை பின்னுக்குத் தள்ளிய புதிய உலக சாதனை

வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் டெஸ்ட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார், இதில் அவர் போத்தம், கெய்ன்ஸ், பிளிண்டாஃப், கபில்தேவ் போன்ற தலைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஆம். மே.இ.தீவுகளுக்கு எதிராக சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வென்றுள்ளது, இந்தப் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச பவுலர் ஆன ஷாகிப் அல் ஹசன், 3,000 ரன்கள், 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இரட்டையை குறைந்த டெஸ்ட் போட்டிகளில் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது 54 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட் 3000 ரன்கள் என்ற டபுள் சாதனையை எட்டி கபில், போத்தம், பிளிண்டாஃப், கெய்ன்ஸ் போன்றவர்களின் சாதனைகளை உடைத்துள்ளார்.

போத்தம் 55 டெஸ்ட்களிலும் கெய்ன்ஸ் 58 டெஸ்ட்களிலும் பிளிண்டாஃப் 69 டெஸ்ட்களிலும் கபில்தேவ் 73 டெஸ்ட்களிலும் 200 விக்கெட் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினர், ஷாகிப் 54 டெஸ்ட்களில் இதனைச் சாதித்துள்ளார்.

சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் 196 விக்கெட்டுகளுடன் வந்த ஷாகிப் அல் ஹசன், 2வது இன்னிங்சில் கெய்ரல் போவெலை வீழ்த்தினார். இது இவரது 200வது விக்கெட்டாகும். முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் ஷாகிப் அல் ஹசன்.

தனது 200 டெஸ்ட் விக்கெட்டுகளில் ஷாகிப் அல் ஹசன் 18 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் இருமுறை டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு 10 விக்கெட் சாதனை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x