202 சிக்சர்கள்; 2018-ல் 1000 ரன்கள்; ரோஹித் சர்மா சாதனை மேல் சாதனை: தோனியுடன் உயர்மட்டப் பட்டியலில் இடம்பெற்றார்- தொடரை வென்றது இந்தியா

202 சிக்சர்கள்; 2018-ல் 1000 ரன்கள்; ரோஹித் சர்மா சாதனை மேல் சாதனை: தோனியுடன் உயர்மட்டப் பட்டியலில் இடம்பெற்றார்- தொடரை வென்றது இந்தியா
Updated on
1 min read

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 5வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்த மே.இ.தீவுகள் அணி 104 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது இதில் ரோஹித் சர்மா 4 சிக்சர்களை அடித்தார். இதில் 2வது சிக்சர் அவரது 200வது சிக்சர் என்ற மைல்கல் சிக்சராகும்.

இந்திய அணி 105/1 என்று வெற்றி பெற்றதில் ரோஹித் சர்மா 63 நாட் அவுட், விராட் கோலி 33 நாட் அவுட்.  2018-ல் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது.

இதன் மூலம் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் தோனி 218 சிக்சர்கள் அடித்துள்ளார்.

ரோஹித் சர்மா அன்று சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் சிக்சர்கள் சாதனையை முறியடித்தார், பிறகு  198 சிக்சர்களுடன் இன்று களமிறங்கினார். தற்போது 200வது சிக்சரை ஹோல்டர் பந்தை லாங் ஆனில் மெஜஸ்டிக்காக தூக்கி சிக்சருக்கு அடித்ததன் மூலம் மைல்கல்லை எட்டினார்.

இதன் மூலம் அப்ரீடி, கெய்ல், ஜெயசூரியா, தோனி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம் என்ற உயர்மட்ட வரிசையில் இணைந்தார் ரோஹித்.

மேலும் ரோஹித் சர்மா 376 ரன்களுக்கும் மேல் இந்த தொடரில் ரன்கள் சேர்த்து மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் சேர்த்த 2வது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். சிக்சர்கள் பட்டியலில் ஷாகித் அஃப்ரீடி 351 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in