Last Updated : 16 Nov, 2018 03:36 PM

 

Published : 16 Nov 2018 03:36 PM
Last Updated : 16 Nov 2018 03:36 PM

2019 ஐபிஎல்: ஒவ்வொரு அணியிலும் கழற்றிவிடப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்?- இதோ பட்டியல்

2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வரும் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும் வருகின்றன. அதன் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான இப்போதே ஒவ்வொரு அணிகளும் தங்களின் வீரர்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகின்றன. அடுத்த மாதம் சிறிய அளவில் நடைபெறும் ஏலத்தில் இந்த வீரர்கள் மாற்றிக்கொள்ளவும், ஏலம் எடுக்கப்படவும் உள்ளனர். அதன் முன்னோட்டமாக ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான முக்கிய வீரர்களைத் தக்கவைத்தும், சிலரை விடுவித்தும், அதற்குப்பதிலாக புதிய வீரர்களைத் தேர்வு செய்யவும் ஆயத்தமாகி இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் விடுவித்த, தக்கவைத்த வீரர்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி

மாற்றப்பட்ட வீரர்: மார்கஸ் ஸ்டோய்னிஸ்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: குயின்டன் டீ காக், மன்தீப் சிங், பெரன்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், கோரே ஆன்டர்சன்ஸ சர்பிராஸ் கான்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட் கோலி, டிவில்லியர்ஸ், பர்தீவ் படேல், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, மொயின் அலி, கோலின் டி கிராண்ட்ஹோம், யஜுவேந்திர சாஹல், முகமது சிராஜ், டிம் சவுதி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்வந்த் கெஜ்ரோலியா, நாதன் கோல்டர் நீல்

கையிருப்பு பணம்: ரூ.18.15 கோடி

இதில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக்கை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்றுள்ளது பெங்களூரு அணி. அதற்கு பதிலாக அந்த பணத்தின் மூலம் மன்தீப் சிங், ஆஸி வீரர் ஸ்டோய்னிஸ் வாங்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

புதிய வீரர்: குயின்டன் டீ காக்

விடுவிக்கப்பட்டவர்கள்: முஸ்தபிஜுர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ், அகிலா தனஞ்சயா, ஜே.பி. டுமினி, சவுரப் திவாரி, தஜிந்தர் சிங், மோசின் கான், பிரதீப் சங்வான், எம்.டி நிதிஷ், சரத் லம்பா

தக்கவைக்கப்பட்டவர்கள்: ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, குர்னல் பாண்டியா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சாஹர், அங்குல் ராய், சிதேஷ் லாட், ஆதித்ய தாரே, எவின் லுவிஸ், பொலார்ட், பென் கட்டிங், மெக்லாரன், ஆடம் மில்னே, ஜேஸன் பெஹ்ரன்ட்ராப்

பணம் இருப்பு: ரூ.11.15 கோடி

மும்பை இந்தியன்ஸ் அணி டீ காக்கை வாங்கியுள்ளது. மேலும், தங்கள் அணியில் இருந்து முஸ்தபிஜூர் ரஹ்மான், இலங்கை வீரர் தனஞ்செயா, ஆஸி வீரர் கம்மின்ஸ் ஆகியோரை விடுவித்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ்

புதிய வீரர்: ஷிகர் தவண்

விடுவிக்கப்பட்டவர்கள்: கவுதம் கம்பீர், ஜேஸன் ராய், குருகிரீத் மான், கிளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, டான் கிறிஸ்டியன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம், ஷியான் கோஸ், லியாம் பிளங்கெட், ஜூனியர் டாலா, நமன் ஓஜா

தக்கவைக்கப்பட்டவர்கள்: ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், மன்ஜோத் கல்ரா, கோலின் மன்ரோ, கிறிஸ் மோரிஸ், ஜெயந்த் யாதவ், ராகுல் திவேஷியா, ஹர்சல் படேல், அமித் மிஸ்ரா, காசிகோ ரபாடா, டிரன்ட் போல்ட், சந்தீப் லாமிசானே, ஆவேஷ் கான்,

பணம் இருப்பு ரூ.25.50 கோடி

சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ஷிகர் தவணை டெல்லி அணி வாங்கியுள்ளது. அதேசமயம், தங்கள் அணியில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, நதீம் ஆகியோரை சன் ரைசர்ஸ் அணிக்கு வழங்கியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

புதிய வீரர்கள்: விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷான்பாஷ் நதீம்

விடுவிக்கப்பட்டவர்கள்: ஷிகர் தவண், சச்சின் பேபி, டான்மே அகர்வால், விர்த்திமான் சஹா, கிறிஸ் ஜோர்டன், கார்லோஸ் பிராத்வெய்ட், பிபுல் சர்மா, சயித் மெஹதி ஹசன்

தக்கவைக்கப்பட்டவர்கள்: டேவிட் வார்னர், யூசுப் பதான், ரஷித் கான், சகிப் அல் ஹசன், ஸ்டான்லேக், கானே வில்லியம்ஸன், முகமது நபி, புவனேஷ்வர் குமார், மணிஷ் பாண்டே, டி.நடராஜன், ரிக்கி புகி, சந்தீப் சர்மா, கோஸாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, பாசில் தம்பி, தீபக் ஹூடா

பணம் இருப்பு: ரூ.9.70 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ்

விடுவிக்கப்பட்டவர்கள்: மார்க் வூட், கனிஷ்க் சேத், சர்மா

தக்கவைக்கப்பட்டவர்கள்: எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.,

பணம் இருப்பு : ரூ.8.40 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

விடுவிக்கப்பட்டவர்கள்: மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஜான்ஸன், டாம் கரன், கேமரூன் டெல்போர்ட், ஜாவன் சீர்லஸ், இஷாங் ஜக்கி, அபூர்வ் வான்கடே, வினய் குமார்

தக்கவைக்கப்பட்டவர்கள்: தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், சுப்மான் கில், நிதின் ராணா, ரிங்கு சிங், ஆன்ட்ரூ ரஷல், சுனில் நரேன், ஷிவம் மவி, குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, நாகர்கோட்டி, பிரஷித் கிருஷ்ணா

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

புதிய வீரர் : மன்தீப் சிங்

விடுவிக்கப்பட்டவர்கள்: மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ஆரேன் பிஞ்ச், மோகித் சர்மா, பரிந்தர் சரண், யுவராஜ் சிங், பென் துவார்சிஸ், மனோஜ் திவார், அக்ஸ்தீப் சிங், பிரதீப் சாஹூ, மயங்க் தாகர், மன்சூர் தார்

தக்கவைக்கப்பட்டவர்கள்: கிறிஸ் கெயில், டேவிட் மில்லர், கருண் நாயர், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஆர்.எஸ்வின், அங்கித் ராஜ்புத், ஆன்ட்ரூ டை, முஜிப் உர் ரஹ்மான்.

பணம் இருப்பு: ரூ.36.20 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

விடுவிக்கப்பட்டவர்கள்: ஜெயதேவ் உனட்கட், அனுரீட் சிங், அங்கித் சர்மா, ஜதின் சக்சேனா, டிஆர்கி, பென் லாலின்

தக்கவைக்கப்பட்டவர்கள்: ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி, அஜின்கிய ரஹானே, கே. கவுதம், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் கோபால், ஆர்யமான் பிர்லா, மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவல் குல்கர்னி, மகிபால் லாம்ரார்.

பணம் இருப்பு: ரூ.20.95 கோடி

இந்த அணியில் இருந்து ரூ.11.50 கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x