

நடுவரின் தவறான முடிவால் நான் தோல்வி அடைந்தேன் என்று பல்கேரிய குத்துச்சண்டை வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவா தெரிவித்தார்.
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகள் டெல்லியில் நடை பெற்று வருகின்றன. நேற்று நடை பெற்ற பான்டம்வெயிட் 54 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் 3-2 என்ற கணக்கில் ஸ்டானிமிராவை வீழ்த்தினார்.
தோல்விக்குப் பின் ஸ்டானிமிரா கூறும்போது, “நடுவர்களின் தவறான முடிவால் நான் தோல்வி கண்டேன். போட்டி நடுவர்கள் ஊழல்வாதிகள். பணம் பெற்றுக் கொண்டு எனக்கு எதிரான முடிவைக் கொடுத்துவிட்டனர்” என்றார். இதுதொடர்பாக சர்வ தேச குத்துச்சண்டை சங்கத்திடமும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
இதையடுத்து ஸ்டானிமிரா புகார் தொடர்பாக விசாரணை நடத் தப்படும் என்று சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அறிவித்துள்ளது.
2014 உலகக் கோப்பை குத்துச் சண்டை போட்டியில் ஸ்டானிமிரா, தங்கம் வென்றவர் என்பது குறிப் பிடத்தக்கது.