Published : 11 Nov 2018 09:33 AM
Last Updated : 11 Nov 2018 09:33 AM

மகளிர் உலகக் கோப்பை டி 20 தொடர்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

6-வது மகளிர் உலகக் கோப்பை டி 20 தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் நியூஸிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 51 பந்துகளில் 103 ரன்கள் விளாசி மிளரச் செய்தார். இதன் மூலம் டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாத னையை ஹர்மான்பிரித் கவுர் படைத்திருந்தார். அவரது அதிரடி யால் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடரை வெற்றி கரமாக தொடங்கிய இந்திய மகளிர் அணியினர் தனது 2-வது ஆட்டத் தில் இன்று பரம வைரியான பாகிஸ் தான் அணியை சந்திக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணியினர் தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க ஹர்மான்பிரீத் குழுவினர் முயற்சிக்கக்கூடும்.

ஹர்மான்பிரீத் கவுருக்கு உறுதுணையாக விளையாடி 45 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்த இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப் படக்கூடும். தானியா பாட்டியா, ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் மட்டையை சுழற்றும் பட்சத்தில் இந்திய அணி கூடுதல் வலுப் பெறும். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜூம் பலம் சேர்ப்பவராக உள்ளார்.

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்தி ரேலியாவிடம் தோல்வி கண்ட நிலையில் இந்திய அணியை எதிர் கொள்கிறது. அந்த அணியில் கேப் டன் ஜவேரியா கான், சுழற்பந்து வீச்சாளர் சனா மிர், ஆல்ரவுண்டர் பிஸ்மா மகரூப் ஆகியோர் நம் பிக்கை அளிக்கக்கூடிய வீராங் கனைகளாக உள்ளனர். எனினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கூட்டாக இணைந்து உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி சற்று சுதாரித்து விளையாடக்கூடும்.

நேரம்: இரவு 8.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x