தோனி நீக்கம் ஏன்? - கேப்டன் விராட் கோலி நழுவல்

தோனி நீக்கம் ஏன்? - கேப்டன் விராட் கோலி நழுவல்
Updated on
1 min read

மே.இ.தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பினிஷர், விக்கெட் கீப்பர் தோனியை நீக்கியது பற்றி விராட் கோலியிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது நழுவலான பதிலை அளித்துத் தப்பித்துக் கொண்டார்.

தோனியை நீக்கியதற்குக் காரணமாக எம்.எஸ்.கே.பிரசாத் கூறிய போது, 2வது விக்கெட் கீப்பரை இப்போதே தயார்ப்படுத்தவும் ஒருநாள் போட்டிகளில் தோனி தன் கவனத்தை இன்னும் கூர்மையாக்கவும் டி20 சுமையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விராட், இது பற்றி அனைவரும் நினைப்பது போல் அல்ல ஒரு கேப்டனாக நான் இதனை உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன் என்று கோலி கூறும்போது, தோனி நீக்கத்துக்கு  நான் காரணமல்ல என்பதையும் சூசகமாகத் தெரிவித்தார்

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 3-1 என்று இந்தியா கைப்பற்றியது, தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தொடர் முடிந்தவுடன் வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:

நான் தவறாகக் கூறவில்லையெனில், அணித்தேர்வுக்குழுவினர் என்ன கூறினார்களோ அதுதான், அந்த முடிவை எடுப்பதற்கு முன் தோனியிடம் பேசியுள்ளனர். ஆகவே இங்கு அமர்ந்து கொண்டு  நான் அதை விளக்க வேண்டிய அவசியமில்லை.  அணித்தேர்வுக்குழுவினர் இது குறித்து நடந்ததை விளக்கிவிட்டனர். நான் அந்த உரையாடலில் பங்கேற்கவில்லை.

எப்படியிருந்தாலும் அவர் ஒருநாள் போட்டிகளில் ஆடப்போகிறார்... அந்தக் கோணத்திலிருந்து பார்க்கும் போது அவர் இளம் வீரர்களுக்கு உதவியுள்ளார். இதில் மற்றவர்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை, ஒரு கேப்டனாக நான் இதனை உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in