Published : 11 Nov 2018 10:56 AM
Last Updated : 11 Nov 2018 10:56 AM

டி 20 தொடரில் தோல்விகள் ஏன்?- மனம் திறக்கிறார் தினேஷ் ரம்தின்

இந்தியா - மேற்கிந்தியத் தீவு கள் அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம் பரம் மைதானத்தில் இன்று நடை பெறுகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தினேஷ் ரம்தின் கூறியதாவது:

தற்போதைய சூழ்நிலையில் ஒரு அணியை கட்டமைப்பது கடினம். எங்களது டி 20 வீரர்களை பார்த்தால் தெரியும், உலகம் முழுவதும் நடைபெறும் டி 20 தொடர்களில் அவர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்த அம்சத்தில்தான் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்கள் அணியில் சீனியர் வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் இந்த தொடரில் 0-2 என பின்தங்கியிருப் பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

குல்தீப் யாதவ் பந்தை எங்களால் கணித்து விளையாட முடிய வில்லை. அடிப்படையில் அவர், நடுகள ஓவர்களில் அச்சுறுத்தலாக திகழ்கிறார். துரதிருஷ்டவசமாக நாங்கள் அவரை கடந்து செல்ல முடியவில்லை. உலக சாம்பிய னான நாங்கள் குறுகிய வடிவிலான ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட முடியாதது ஏமாற்றமாகவே உள் ளது. டி 20 ஆட்டம் என்பதே விரைவாக ரன்கள் சேர்ப்பதும், பார்ட்னர்ஷிப்பும்தான்.

இதை நாங்கள் செய்யத் தவறி விட்டோம். சென்னை ஆட்டத் தில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்கள் இந்தியாவில் இருப்பது போன்றே மந்தமாகவும், பந்துகள் சுழலும் தன்மை கொண்டது.

சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம். இங்கு சரியான நீளத் தில் பந்துகளை வீசுவதும் முக்கிய மானது. இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வடிவிலான ஆட்டங் களிலும் வலுவாக உள்ளது. இதற்கு காரணம் ஐபிஎல் தொடர்தான். இளம் வீரர்கள் இந்த வழியாகத் தான் வருகின்றனர். இதனால் கரீபி யன் லீக் உள்ளிட்ட சில தொடர் களால் அடுத்த 5 வருடங்களில் எங்களது கிரிக்கெட்டும் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு தினேஷ் ரம்தின் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், சுனில் நரேன் உள்ளிட்டோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x