Published : 12 Nov 2018 11:25 AM
Last Updated : 12 Nov 2018 11:25 AM

மிட்செல் ஸ்டார்க்கின் வாழ்நாளின் மோசமான ஓவர்: கடைசி 15 ஓவர்களில் ஆஸ்திரேலியா- பெங்களூரு போட்டியை விட மோசம்

ஹோபார்ட்டில் நடைபெற்ற மூன்றாவதும், தொடரின் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 16வது ஓவரில் 55/3 என்று சரிவடைந்த தென் ஆப்பிரிக்கா அதன் பிறகு டுபிளெசிஸ், மில்லர் சதங்களுடன் சாதனை 252 ரன் கூட்டணியுடன் வெற்றிக்கான 320 ரன்களை எட்டியதால் தொடரை 2-1 என்று வென்றது.

இதில் மிட்செல் ஸ்டார்க் தன் வழக்கத்துக்கு மாறாக ஒரே ஓவரில் 20 ரன்களை கடைசியில் கொடுத்து தன் வாழ்நாளின் மோசமான ஓவரை வீசினார். கடைசி 5 ஒவர்களில் 75 ரன்களை விளாசியது தென் ஆப்பிரிக்கா.  இதில் மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டது.  சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டார்க்கின் மிக மோசமான ஓவராகும் இது.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் தங்கள் முதல் 300+ ரன் எண்ணிக்கையை ஒருநாள் போட்டிகளில் எட்டியது.

கடைசி 15 ஒவர்களில் 174 ரன்கள் விளாசப்பட்டது, இது ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் படுமோசமான கடைசி 15 ஒவர்களாகும், இதற்கு முன்னர் பெங்களூருவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் கடைசி 15 ஒவர்களில் 2013-ம் ஆண்டு 173 ரன்களை விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

 

மேலும் நேற்றைய இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் 25 ஓவர்களில் 10 பவுண்டரிகளுடன் 3.73 என்ற ரன் விகிதத்தில் இருந்தது. இதில் 108 டாட் பால்கள். கடைசி 25 ஒவர்களில் 227 ரன்கள் இதில் 30 பவுண்டரிகள்.

மேலும் டுபிளெசிஸ், மில்லர் சேர்த்த 252 ரன்கள் கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3வது பெரிய ரன் கூட்டணியாகும். இதற்கு முன்னர் 2003-ல் சனத் ஜெயசூரியா, மர்வான் அட்டப்பட்டு கூட்டணி 237 ரன்கள் சேர்த்ததுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெரிய கூட்டணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x