வாள்வீச்சு போட்டி: பவானிக்கு தங்கம்

வாள்வீச்சு போட்டி: பவானிக்கு தங்கம்
Updated on
1 min read

சீனியர் காமன்வெல்த் வாள் வீச்சுப் போட்டியில் தமிழ கத்தைச் சேர்ந்த வீராங்கனை சி.ஏ.பவானிதேவி தங்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கான் பெர்ரா நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற சேபர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவியும், இங்கிலாந்தின் எமிலி ருவாக்ஸும் மோதினர். இதில் பவானி தேவி 15-12 என்ற புள்ளிக் கணக்கில் எமிலியைத் தோற்கடித்து தங்கம் வஎன்றார்.

அரை இறுதியில் ஸ்காட் லாந்து வீராங்கனை காட்ரி யோனா தாம்சனை வீழ்த்தி யிருந்தார் பவானிதேவி. முன்னதாக நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்ட்லினுடன் பவானிதேவி மோதினார். இதில் அவர் 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் கெய்ட்லினைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதன்மூலம் காமன்வெல்த் வாள்சண்டையில் சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பவானிதேவி படைத்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற டூர்னாய் சாட்டிலைட் வாள்வீச்சுப் போட்டியில் பவானிதேவி வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in