

நார்வேயின் டிராம்சோ நகரில் நடைபெற்று வரும் 41-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9-வது சுற்றில் இந்திய ஆடவர் அணி, ஆர்ஜென்டீனாவுடன் டிரா செய்தது. அதேநேரத்தில் இந்திய மகளிர் அணி 1.5-2.5 என்ற கணக்கில் உக்ரைனிடம் தோல்வி கண்டது.
ஆடவர் பிரிவில் இந்தியாவின் சேதுராமன், சான்ட்ரோ மெரேகோவுக்கு எதிராக நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் போட்டி டிராவில் முடிந்தது. மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் பரிமராஜன் நெகி, சசிகிரண், அதிபன் ஆகியோர் டிரா செய்தனர்.