ஒருநாள் தொடர்: இந்திய அணி 7-ல் அறிவிப்பு

ஒருநாள் தொடர்: இந்திய அணி 7-ல் அறிவிப்பு
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி மற்றும் ஒரேயொரு டி20 போட்டிக்கான இந்திய அணி ஆகியவை வரும் 7-ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐயின் மார்க்கெட்டிங் கமிட்டி கூட்டம் வரும் 5-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. அடுத்து நடைபெறவுள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் கிரிக்கெட் சீசனுக்கான புதிய டைட்டில் ஸ்பான்சரை தேர்வு செய்வது தொடர்பான டென்டரை இறுதி செய்வதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in