Published : 15 Nov 2018 08:55 AM
Last Updated : 15 Nov 2018 08:55 AM

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்; அரை இறுதி முனைப்பில் இந்தியா: அயர்லாந்துடன் இன்று மோதல்

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்துடன் மோது கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத் தில் அரை இறுதிக்கு முன்னேறு வதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

6-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மேற் கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ஹர்மான்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். அதே வேளையில் 2-வது ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. அனுபவ வீராங்கனையான மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று அயர்லாந்துடன் மோதுகிறது. அந்த அணி தனது இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்திருந்தது. ஆஸ்திரேலியாவிடம் 9 விக்கெட் கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்த அயர்லாந்து, பாகிஸ்தான் அணி யிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வி யடையும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேறும். அதே வேளையில் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தும் பட்சத் தில் அரை இறுதிக்கு முன்னேறு வதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

நியூஸிலாந்து அணியை வீழ்த் திய அதே பிராவிடன்ஸ் மைதானத் தில் தான் இன்றைய ஆட்டத்தை இந்திய அணி சந்திக்கிறது. இந்த மைதானத்தில் தான் ஹர்மான்பிரீத் கவுர் சாதனை சதம் விளாசி யிருந்தார். அதேபோல் இளம் வீராங்கனையான ஜெமிமா ரோக் ஸூம் அரை சதம் விளாசி அனைவ ரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த ஜோடியிடம் இருந்து மீண் டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இவர்களுடன் ஸ்மிருதி மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணி யின் பேட்டிங் திறன் கூடுதல் வலுப் பெறும். பந்து வீச்சில் தயாளன் ஹேமலதா, பூனம் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கூட் டாக 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள இந்த சுழற்கூட்டணி அயர்லாந்து பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.

நேரம்: இரவு 8.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x