Published : 24 Nov 2018 09:28 AM
Last Updated : 24 Nov 2018 09:28 AM

தேசிய அளவிலான `ஹீரோ ஐ லீக்’ கால்பந்து தொடர்: கோவையில் இன்று சென்னை சிட்டி எஃப்.சி.- மணிப்பூர் நெரோகா மோதல்

கோவையில் இன்று நடைபெற உள்ள தேசிய அளவிலான `ஹீரோ ஐ லீக்’ கால்பந்துப் போட்டித் தொட ரில், சென்னை சிட்டி எஃப்.சி. அணியும் (சிசிஎஃப்சி), மணிப்பூர் நெரோகா அணியும் மோதுகின்றன.

அகில இந்திய கால்பந்து சம் மேளனம் சார்பில், `ஹீரோ ஐ லீக் 2018-2019’ தேசிய கால்பந்துப் போட்டி, நாட்டின் பல்வேறு நகரங் களில் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள சென்னை சிட்டி எஃப்.சி. அணி ஏற்கெனவே 5 போட்டிகளில் விளையாடியுள்ளது.

கோவையில் நடைபெற்ற போட்டிகளில் புவனேஸ்வர் இந்தி யன் ஏரோஸ் அணியை வென்றது டன், கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணியை டிரா செய்தது. மேலும், கோழிக்கோட்டில் நடைபெற்ற போட்டியில் கோகுலம் எஃப்.சி. அணியையும், கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியையும், மிசோரத் தில் நடைபெற்ற போட்டியில் ஐஸ் வால் எஃப்.சி. அணியையும் வென் றுள்ளது. இந்தநிலையில், 6-வது போட்டியாக மணிப்பூர் நெரோகா அணியுடன் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் இன்று (நவ. 24) மாலை நடைபெறும் போட்டியில் மோதுகிறது.

இதுகுறித்து சிசிஎஃப்சி அணி யின் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, `இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் எங்கள் அணியினர் சிறப்பாக விளை யாடியுள்ளனர். குறிப்பாக, தமிழக வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள னர். மேலும், தொடர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். கடந்த சீசனில் கோவையில் மணிப்பூர் நெரோகா அணியுடன் மோதியபோது, போட்டி டிரா ஆனது. எனவே, இந்தப் போட்டி யில் வெற்றி பெற போராடுவோம். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது` என்றார்.

மணிப்பூர் நெரோகா அணியின் தலைமை பயிற்சியாளர் மானுவெல் கூறும்போது, `தற்போதைய சீச னில் சென்னை சிட்டி எஃப்.சி. பலம் வாய்ந்த அணியாக உள்ளது. எனி னும், நாங்கள் கடுமையாகப் போராடி, வெற்றியைக் கைப்பற்று வோம்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x