கோலி வேஸ்ட்.. தோனிதான் பெஸ்ட்:  ஷாகித் அஃப்ரீடி அதிரடி

கோலி வேஸ்ட்.. தோனிதான் பெஸ்ட்:  ஷாகித் அஃப்ரீடி அதிரடி
Updated on
1 min read

நவீன கிரிக்கெட் உலகின் கிரேட் என்றும் கிங் கோலி என்றும், இவர் முன்னால் சாதனைகள் சூரியனைக் கண்ட பனிபோல் மறைகிறது என்றெல்லாம் புகழ்ப்பட்டு வருபவர் இந்திய கேப்டன் விராட் கோலி.

ஒரு வீரராக அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருந்தாலும் ஒரு கேப்டனாக அவர் இன்னும் முழு வடிவம் பெறவில்லை என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. ஏற்கெனவே கோலியின் அணித்தேர்வு, பந்து வீச்சு ஒதுக்குதல், பேட்டிங் நிலை மாற்றுதல் போன்றவற்றிலும் களவியூகம் ஆகியவற்றிலும் பந்து வீச்சு மாற்றம், பிட்சைக் கணித்தல் ஆகியவற்றில் இன்னும் அவர் பெரிய முன்னேற்றம் காண வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் ஷாகித் அஃப்ரீடி இந்தியத் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் விராட் கோலியை பெரிய கேப்டன் இல்லை, தோனிதான் பெரிய கேப்டன் என்று கூறியுள்ளார்.

“ஒரு வீரராக எனக்கு மிகவும் பிடித்த, நான் ஆதரிக்கும் பேட்ஸ்மென் விராட் கோலிதான். ஆனால் கேப்டன்சியில் அவர் இன்னும் முன்னேற வேண்டும், நிறைய வேலைகள் அதில் கோலி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் என்னைப்பொறுத்தவரையில் கேப்டன்சியில் தோனிதான் பெஸ்ட், சிறந்த கேப்டன்.

ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டுமெனில் இந்திய பேட்ஸ்மென்கள் தங்கள் பேட்டிங்கை இன்னும் கொஞ்சம் கூட்ட வேண்டும்.  ஆனால் ஆஸ்திரேலிய பிட்ச்கள் முன்பு போல் இல்லை, பவுன்ஸ் அதிகமானால் எளிதில் ரன் அடிக்கலாம். எனவே நன்றாக பேட் செய்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம்” என்றார் ஷாகித் அஃப்ரீடி.

ரமீஸ் ராஜாவும் இந்திய பேட்ஸ்மென்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள் ஆகவே கூடுதல் பவுன்சுக்கு அட்ஜஸ்ட் செய்தால் பவுலர்களும் ஒழுங்காக வீசினால் ஆஸ்திரேலியாவை இம்முறை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in