Published : 02 Aug 2014 09:00 AM
Last Updated : 02 Aug 2014 09:00 AM

பாலியல் பலாத்கார வழக்கில் 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை: வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 6 இளைஞர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வேலூரை அடுத்த அரியூரைச் சேர்ந்தவர் சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயதான இவர், கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி இரவு செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்கு சென்று வீடு திரும்பிய சங்கீதாவை, 6 பேர் கொண்ட கும்பல் பென்னாத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி அருகே பாலியல் பலாத்காரம் செய்தனர்.

வீடுவரை வந்து விட்டுச் சென்ற அவர்கள், நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் நடப்பதே வேறு என மிரட்டியதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார். மறுநாள் காலை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வேலூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சூரியகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது, அரியூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற சவுந்தர்ராஜன், பிரகாசம், சதீஷ் என்ற சரவணன், கொல்லன் என்ற விஜயகுமார், வைத்திய வேலன், புவனேந்திரன் ஆகியோர் சேர்ந்து சங்கீதாவை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட நீதிபதி தீன தயாளன் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில், 6 பேருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித் தார். இதையடுத்து, 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக் கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் வி.கே.ஜெயபால் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x