Published : 13 Oct 2018 08:21 AM
Last Updated : 13 Oct 2018 08:21 AM

கால்பந்து போட்டியில் இந்தியா - சீனா இன்று மோதல்

இந்தியா - சீனா கால்பந்து அணிகள் இடையிலான நட்பு ரீதியிலான ஆட்டம் சீனாவின் சுஹோ நகரில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதுவரை கால்பந்து போட்டிகளில் இந்தியா, சீனா அணிகள் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.

இதில் சீனா 12 முறை வெற்றி பெற்றுள்ளது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளது. இரு அணிகளும் கடைசியாக 1997-ம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற நேரு கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. இதில் சீனா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 21 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இரு அணி கள் மோத உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற் படுத்தி உள்ளது. சுனில் சேத்ரி அணியில் இடம் பெற்றுள்ள நிலையில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் சந்தேஷ் ஜின்ஹான் தலைமையில் கள மிறங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிபா தரவரிசையில் சீனா 76-வது இடத்திலும், இந்தியா 97-வது இடத்திலும் உள்ளன. எனி னும் சீன அணி சிறந்த பார்மில் இல்லை. அந்த அணி சமீபத்தில் அனுபவம் குறைந்த கத்தார் அணியிடம் 0-1 என்ற கோல் கணக் கில் தோல்வியடைந்தது. மேலும் பஹ்ரைன் அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x