Published : 19 Oct 2018 09:28 PM
Last Updated : 19 Oct 2018 09:28 PM

அசார் அலி காமெடி ரன் அவுட் போல் நியூஸிலாந்தில் இன்னொரு கேலிக்கூத்து ரன் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வியாழனன்று அசார் அலி பந்து பவுண்டரிக்குச் சென்றதாக நினைத்து அவரும் ஆசாத் ஷபீக்கும், பிட்சில் நின்று அளவளாவ பந்து பவுண்டரிக்கு முன்னால் நின்றது தெரியவில்லை, மிட்செல் ஸ்டார்க் த்ரோ அடிக்க டிம் பெய்ன் ரன் அவுட் செய்தது உலகப் புகழ்பெற்ற காமெடி ரன் அவுட் ஆனது போல் நியூஸிலாந்தில் இன்று இன்னொரு ரன் அவுட் இதே போல் காமெடி ஆகியுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் இந்த இன்னொரு காமெடி ரன் அவுட் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிளங்கெட் ஷீல்ட் போட்டி இன்று வெலிங்டன் மற்றும் ஒடாகோ அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் ஆல் ரவுண்டர் நேதன் ஸ்மித் மற்றும் மைக்கேல் ரிப்பான் ஆகியோர் இந்த கேலிக்கூத்து ரன் அவுட்டில் ஈடுபட்டனர்.

47வது ஓவரில் ரிப்பான் ஒரு பந்தை பைன் லெக்கில் பிளிக் செய்து விட்டு எளிதான 2 ரன்களுக்காக வேகமாக ஓடினார். ஆனால் ரிப்பான் முதல் ரன்னை முடித்து விட்டு ரன்னர் முனையிலிருந்து 2வது ரன்னுக்காக திரும்பிய போது வழுக்கி விழுந்தார், இருமுறை விழுந்தார்.

பேட்டிங் முனையிலிருந்து 2வது ரன்னுக்காக ஓடிவந்த நேதன் ஸ்மித்தும் நடுவழியில் வழுக்கி விழுந்தார். வெலிங்டன் விக்கெட் கீப்பர் லேச்சி ஜான்ஸ் பைல்களை அகற்றினார். அப்படிச் செய்யும் போது இரு பேட்ஸ்மென்களும் கிரீசுக்கு வெளியே வழுக்கி விழுந்த நிலையில் இருந்தனர்.

இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x