ஆஸி. டெஸ்ட் தொடர்: ரோஹித் சர்மா, முரளி விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பர்தீவ் படேல் அழைப்பு: புதிய மாற்றங்களுடன் அணி

ஆஸி. டெஸ்ட் தொடர்: ரோஹித் சர்மா, முரளி விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு: பர்தீவ் படேல் அழைப்பு: புதிய மாற்றங்களுடன் அணி
Updated on
1 min read

புனே

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் முரளி விஜய், ரோஹித் சர்மா, பர்தீவ் படேல் ஆகியோர் வாயப்பு பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சொதப்பியதால் அதன்பின் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டாத பர்தீவ் படேலும், பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டதால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படாத ரோஹித் சர்மாவும் ஆஸ்திரேலியத் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 16-ம் தேதி ஆஸ்திரேலியா புறப்படும் இந்தியஅணி அந்நாட்டு அணியுடன் பயிற்சிப் போட்டியிலும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களை புனேயில் நேற்று தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் தலைமையிலான குழு தேர்வு செய்தது. அது குறித்த விவரம்வருமாறு:

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்த பிரித்வி ஷா, கே.எல் ராகுல் ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கிலாந்து ெடஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சொதப்பியதால் ஓரம்கட்டப்பட்ட முரளிவிஜய் கவுண்டி போட்டியில் நன்றாக பேட் செய்ததால், ஆஸ்திரேலியத் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இசாந்த் சர்மா, பும்ரா, உமேஷ்  யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை.

இங்கிலாந்தில் ஒரு டெஸ்டில் வாய்ப்பு பெற்று சிறப்பாக பேட் செய்த ஹனுமா விஹாரி ஆஸ்திரேலியத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், கருண் நாயர், மயங்க் அகர்வால் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.

நடுவரிசையை பலப்படுத்த ரோஹித் சர்மா இருப்பதால், கருண் நாயர் தேர்வு செய்யப்படவில்லை. விஜய் ஹசாரே, தியோடர்டிராபில் விஹாரி சிறப்பாக பேட் செய்து 3 அரைசதங்கள் அடித்து ஃபார்மில் இருப்பதால், அவர் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் சுழற்பந்துவீச்சில் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியத் தொடருக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக பர்தீவ் படேல் ஒரு கீப்பரும், ரிஷப் பந்த் மற்றொரு கீப்பரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 16-ம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 28-ம்தேதி பயிற்சிப்போட்டியில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி விவரம்(ஆஸி.டெஸ்ட் தொடர்)

விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, சட்டீஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பர்தீவ் படேல்(விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in