

மும்பையில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் ராயுடுவின் அதிரடி அரைசதங்களில் 40 ஒவர்கள் முடிவில் 261 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது ரோஹித் சர்மா 17 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 137 ரன்களுடனும் ராயுடு 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 64 பந்துகளில் 75 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 41 ஒவர்கள் முடிவில் 275/2 என்று வேகமாக முன்னேறி வருகிறது.
இந்நிலையில் இன்னிங்சின் 40வது ஓவரில் கிமோ பால் வீசிய பந்தை பவுலர் தலைக்கு மேல் சிக்சர் தூக்கி தனது 2வது சிக்சரை அடித்த போது சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டியில் 195 சிக்சர்கள் சாதனையை உடைத்து 196 சிக்சர்களுடன் இருக்கிறார், 200 சிக்சர்களாகலாம், ரோஹித் சர்மா இன்னொரு இரட்டைச்சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற வேகத்தில் ஆடிவருகிறார் அவர். 3வது சிக்சரையும் அடித்து 197 சிக்சர்களுக்கு வந்துள்ளார். ஆனால் கடைசியில் 162 ரன்களில் நர்ஸ் பந்தை ஷார்ட் 3rd மேன் திசையில் பிடி கொடுத்து அவுட் ஆனார்.
ராயுடுவும், ரோஹித் சர்மாவும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக சுமார் 25 ஒவர்களில் 186 ரன்களைச் சேர்த்து வலுவாகச் சென்று கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக ஷிகர் தவண் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 அபார சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்திருந்த போது ஆஃப் ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட் கையில் நேரக புல் ஷாட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
விராட் கோலி சங்கக்காராவின் தொடர் 4 சத சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்த்த மும்பை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து கிமார் ரோச் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அவர் 16 ரன்களில் அவுட்.
ரோஹித் சர்மா 60 பந்துகளில் 50 ரன்களையும் 98 பந்துகளில் சதத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.
நான் நிர்வாணமாக நிற்பது போல் என்னை ஃபீல் பண்ண வைக்கிறாங்க: #MeToo லீனா மணிமேகலை Exclusive