

அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்ற டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் தோல்வி கண்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இறுதிச்சுற்றில் எகிப்தின் ஷெர்பினி 11-7, 11-5, 11-7 என்ற நேர் செட்களில் தீபிகா பலிக்கலைத் தோற்கடித்தார். 18 வயதாகும் ஷெர்பினி பெரிய அளவிலான போட்டிகளில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது.
ஜூனியர் உலக சாம்பியனான ஷெர்பினி, கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான நிகோல் டேவிட்டைத் தோற்கடித்திருந்த நிலையில், இப்போது தீபிகாவை வீழ்த்தியிருக்கிறார்.