Published : 16 Oct 2018 19:50 pm

Updated : 16 Oct 2018 19:56 pm

 

Published : 16 Oct 2018 07:50 PM
Last Updated : 16 Oct 2018 07:56 PM

ஆஸ்திரேலியா தொடருக்கு உமேஷ் யாதவ் தேவையா? சுனில் கவாஸ்கர் பதில்

மே.இ.தீவுகளுக்கு எதிராக மட்டைப் பிட்சில் ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த உமேஷ் யாதவ் தன் கைகளில் வித்தைகளை வைத்துள்ளவர் எனவே அவர் ஆஸ்திரேலியா தொடருக்கு அவசியம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இந்தியா டுடேவுக்குக் கூறும்போது, “உமேஷ் யாதவ் அணிக்குள் வருவதும் போவதுமாக நீண்ட நாட்களாக இருக்கிறார், தென் ஆப்பிரிக்க தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை, இங்கிலாந்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவர் லேட் இன்ஸ்விங் பந்துகளை வீசும் விதம், அந்த ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள் ஆகியவை ஆஸ்திரேலியா தொடருக்கு உமேஷ் யாதவ் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

பும்ரா, புவனேஷ்வர்குமார், ஷமி, இஷாந்த் சர்மா இருக்கும் போது வாய்ப்பு கடினம்தான், ஆனால் மாற்று பவுலராகவும் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு இவர் அங்கு வீசுவதும் மிக மிக முக்கியமானது எனவே ஆஸ்திரேலியா தொடருக்கு உமேஷ் அவசியம்” என்று கூறினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author