Published : 27 Oct 2018 01:57 PM
Last Updated : 27 Oct 2018 01:57 PM

கடந்த போட்டி ‘டை’யிலிருந்து பாடமா? டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த கோலி: உமேஷ், ஷமி, ஜடேஜா நீக்கம்

புனேயில் தொடங்கிய 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்துள்ளார், இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமட் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், சாஹல், குல்தீப் ஸ்பின்னர்கள்.

உமேஷ் யாதவ், ஷமி, ஜடேஜா அணியில் இல்லை, கேதர் ஜாதவ் தன் உடல்தகுதியை மேம்படுத்த வேண்டும் என்று கோலியே கூறிவிட்டார்.

பிட்ச் பற்றி கோலி கூறும்போது, “நல்ல பிட்ச் போல் தெரிகிறது. கொஞ்சம் சீரான புல்லும் உள்ளது. மாலையில் பந்துகள் மட்டைக்கு நன்றாக வரும் போல் தெரிகிறது. உலகக்கோப்பையில் ஆடப்போகும் வீரர்கள் அனைவருடனும் ஆட வேண்டும் என்பதே திட்டம், சேர்ந்து ஆடவேண்டும் என்பது முக்கியம். அதனால்தான் புவனேஷ்வர் குமார், பும்ராவை அணியில் அழைத்தோம். கேதார் ஜாதவ் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். உமேஷ், ஜட்டு, ஷமி இல்லை” என்றார்.

கடந்த போட்டியில் பனிப்பொழிவு பற்றி கவலைப்படமால் இந்த மே.இ.தீவுகள் அணியை எப்படியும் வீழ்த்தி விடலாம் என்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த விராட் கோலி. 2வது போட்டி டை ஆனதையடுத்து இந்த முக்கியப் போட்டியில் ரிஸ்க் எடுக்கவிரும்பாமல் இலக்கை விரட்ட முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது.

ஹெட்மையர், ஷேய் ஹோப் கடந்த போட்டியில் எங்களை அவ்வளவு எளிதில் தள்ளிவிட முடியாது என்ற விதமாக ஆடி அரிய டை ஒன்றை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x